STCK : முகப்பு

கண்டன்விளை, புனித குழந்தை தெரேசா ஆலய இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!

ஆலயத் திருப்பலி நேரங்கள்

தினசரி திருப்பலிகள்
( வியாழன் தவிர, காலை 6:15 மணி)

வியாழன் நவநாள் திருப்பலி
(மாலை 6:15 மணி) நேரலை!

ஞாயிறு திருப்பலி
(காலை 7:00 மணி) நேரலை!

பக்த சபை இயக்கங்கள்

எமது பங்கில், 19 அன்பியங்களும், 18 பக்தசபை இயக்கங்களும், மறைக்கல்வி மன்றமும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

செய்திகள் & நிகழ்ச்சிகள்

  • அன்பானவர்களே!
    1923 ஆம் ஆண்டு, குழந்தை இயேசுவின் புனித தெரேசா அருளாளர் பட்டம் பெற்றதும், அவருக்காக உலகிலேயே முதன் முதலாக அர்ப்பணிக்கப்பட்டு, ஒரு நூற்றாண்டை கடந்தப் பெருமிதத்துடன் திகழும் ஆலயம் தான், குழித்துறை மறைமாவட்டத்தில் அமைந்துள்ள கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம்.

    "என்னுடையப் பெயர் குழந்தை இயேசுவின் தெரேசா. நான் இந்தியர்கள் அனைவரையும் சிறுமலருக்கு மரியாதை செலுத்துவதற்காக கண்டன்விளைக்கு அழைத்து வருவேன்” என்றப் புனித தெரேசாவின் கூற்று நிறைவேறும் வகையில், வருகிற 2026, அக்டோபர் 25 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8 மணிக்கு, புனித தெரேசாவின் திருப்பண்டப் பேழையானது பக்தர்கள் வருகைபுரிந்து வணக்கம் செலுத்த, தகுந்த மரியாதையுடன் திருப்பயண பவனியாக எடுத்துவரப்படுகிறது என்பதை, மிகுந்தப் பெருமிதத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்!

    இந்தப் புனித நிகழ்வில் நடைபெறும் திருப்பலி, மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் வணக்க நிகழ்வு ஆகியவைகளில் பக்தர்கள் அனைவரும் பயனுள்ள விதத்தில் பங்கெடுத்து, இறை ஆசீரை குழந்தை இயேசுவின் புனித தெரேசா வழியாக நிறைவாய் பெற்றுச்செல்ல, உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். நன்றி!

பழம்பெரும் ஆலய வரலாறு

கண்டன்விளை ஆலயம், குழந்தை இயேசுவின் புனித தெரேசா 1923 - இல் அருளாளர் பட்டம் பெற்றதும் அவருக்கென முதன்முதலாக எழுப்பப்பட்ட ஆலயமாகும்.

பழம்பெரும் கண்டன்விளை ஆலய வரலாறு, தெளிவாக எழுதப்பட்டு அண்மையில் ஒரு ஆவணக்குறும்படமாக வெளியிடப்பட்டுள்ளது. இது புனித தெரேசாவின் வரலாற்றையும் அதோடு கண்டன்விளை பங்கின் வரலாற்றையும் உள்ளடக்கியது.

மேலும் படிக்க

பங்குத்தந்தையின் செய்தி

அன்பிற்கினிய இறைமக்களே!
புனித தெரேசாவுக்காக இந்தியாவில் அற்பணிக்கப்பட்டுள்ள ஆலயங்களுடன் ஒரு புதிய நட்புறவை ஏற்படுத்திக்கொள்ள விரும்புகிறோம்.

இந்நிலையில், அந்த ஆலயங்களைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருந்தால், பின்வரும் மின்னஞ்சலுக்கு உங்கள் தகவலைத் தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்!

அருட்பணி. P. ஆல்ட்டஸ் பிளின்டன் பஜிவ் (பங்குத்தந்தை)
மின்னஞ்சல்: info@thereseofkandanvilai

பங்கு அருட்பணிபேரவை

தற்போது அமைந்துள்ள பங்கு அருட்பணிப் பேரவை, 2021 - ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 மற்றும் 21 - ஆம் தேதிகளில் தேர்தல் முறையில் அமைக்கப்பட்டு 41 உறுப்பினர்களுடன் (பங்குத்தந்தையுடன் சேர்த்து) மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மேலும் படிக்க